widgets

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

ஓட்டமாவடி பழைய பாலம்


முதுமை என்று
முதுகில் ஏறி
முகத்தில் உதைப்பது
சிலர் தந்திரவாதம்

வேண்டுமானால்
உன் புதிய பாலத்தில்
போட்டுப்பாருடா
ரயில்வே தண்டவாளம்

வேண்டாமடா
ஆடிப் போகும்
அதன் அஸ்திவாரம்

இனி
என்னைப் போல ஒருவன்
உங்களூரில் பிறக்க
அவன் எடுக்க வேண்டும்
தசாவதாரம்.

#றியாஸ்முஹமட்

1 கருத்து:

  1. வணக்கம்
    மக்க சக்கதி பலம் என்றால் பாலத்தை யாரும் ஒன்றும் பன்ன முடியாது.. நன்றாக உள்ளது கவிதை. வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு