வாழ்க்கையை வாழடா,
வாழ்ந்து நீ பாருடா..!!
தடைகள் ஏதடா,
தள்ளி போகாதடா..!!
தேடல்கள் சுகமடா,
தேடித்தான் பாரடா...!
ஓடும் நதியடா,
ஓடிப் பாயும் வேங்கையடா..!!
பாயும் வெள்ளமடா,
பாய் மரக் கப்பலடா..!!
இளமையோ நெருப்படா,
இரத்தமோ துடிப்படா..!!
காதலோ கானலடா,
கலை பயில முடியாதடா..!
காலமோ பொன்னடா,
கரைந்து விடுமடா...!!
கல்வியே காலமடா,
கருத்தினில் வையடா..!!
உமக்கு ஏன் வெட்கமடா,
உள்ளத்தில் ஏன் அச்சமடா..!!
வறுமையை விரட்டடா,
வரம்பு மீறாதடா..!!
கைத் தொழில் பயிலடா,
கை வரிசை காட்டுடா..!!
களத்தில் இறங்கடா,
களையை பிடுங்கடா...!!
உறக்கமே போதுமடா
உலகத்தை வெல்லுடா..!!
உறவை மதியடா,
உயர்ந்து செல்லடா..!!
இறைவன் ஒருவனடா,
இறையச்சம் வேணுமடா..!!
வணக்கமே வாசலடா,
வழி மறக்கக் கூடாதடா..!!
தந்தவன் இறைவனடா,
தலைக்கனம் ஏனடா..!!
நாளே நமதடா,
நம்பி நடவேடா..!!
வாழ்கையை வாழடா,
வாழ்ந்து நீ உயரடா..!!
#றியாஸ்முஹமட்
வணக்கம்
பதிலளிநீக்குகவிதையின் ஒவ்வொரு வரிகளும் மிகவும் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. எனது பக்கம் கவிதையாக வாருங்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஈழம்...: ...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நம்பிக்கையை அளிக்கும் நல்ல வரிகள் நண்பரே வாழ்த்துகள்
பதிலளிநீக்குநண்பரே தாங்கள் மதுரை பதிவர் விழாவுக்கு வந்தீர்களோ ?
அன்புடன் தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
ரொம்ப மகிழ்ச்சி நண்பரே
பதிலளிநீக்குநான் அங்கு வரவில்லை உங்கள் அன்பிற்கு நன்றி!
நன்றி அருமை நண்பர் ரூபன்
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி !
நன்றி அருமை நண்பர் ரூபன்
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி !
அருமை நண்பரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குஅருமை நண்பி துஷ்யந்தி
மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குஅருமை நண்பி துஷ்யந்தி