widgets

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

எஸ்.எல்.எம் ஹனீபா


கவிஞர்களோ பல லட்சம்
நீங்கதான்யா விருட்சம்
ஆலமர விருட்சம்

மூத்த இலக்கியத்தின்
முன்னோடி
கல்குடாவின் கண்ணாடி
தங்களைத் தேடி
துடிக்கிறதே என் உயிர் நாடி

புதுமை ,புதுமை
உங்கள் படைப்பு

புதுமைப்பித்தனுக்கு
அடுத்து வந்த பிறப்பு

தோள் கொடுக்கும்
தொல்காப்பியமே !

கொஞ்சம் சொல்லித்
தாரும்
தமிழ் இலக்கணமே !

பதினெண் மேற்கணக்கு
பதினெண் கீழ்க்கணக்கு
இவையெல்லாம்
உங்களுக்கு மனக்கணக்கு
உங்க புகழுக்கு
என்னைய்யா கணக்கு

காடுகளிலும்
மேடுகளிலும்
உங்கள் பாதம் !

மாபெரும்
சபைகளிலும்
உங்கள் நாமம் !

சிட்டுக் குருவி கூட
நீங்க கதை சொன்னா
கேட்கும்

எங்க ஊரு குயிலும்
உங்க பெயரைச்
சொல்லிதானே
கூவும்

தங்களைத் தேடி
துள்ளிக் குதிக்கிறதே
புள்ளி மான்கள்

தங்கள் மூச்சுக் காற்று
எங்கள் ஊரில் கலந்திட
என்ன தவம் செய்தோம்
நாங்கள்

அன்று தவம்
இருந்தது 'தகவம்'
ஆதலால் இறைவன்
கொடுத்தான்
அதற்கு ஒரு வரம்

எத்தனை எத்தனையோ
கெளரவம் நீங்கதாய்யா
பேரிலக்கிய சமுத்திரம்
சாகித்திய மண்டலம்

கலிப்பா வஞ்சிப்பா
ஆசிரியப்பா
அட... அப்பப்பா
அந்த 'மக்கத்துச் சால்வை'
மணக்குதப்பா...

சைக்கிளில் வரும்
சங்க காலம்
நீங்கள் வாழ வேண்டும்
நீடூழீ காலம்

#றியாஸ்முஹமட்

2 கருத்துகள்:

  1. வணக்கம்

    அவர்களின் தமிழ்ப்பணி நாளை உலகை ஆளப்போகும் இளம் சமுதாயத்துக்கு ஒரு வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம். எல்லோரின் ஆசீர் வாதத்துடன் இன்னும் வாழ்வாறாக... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அருமை நண்பரே அற்புதமாக கவிதையை வடித்து இருக்கிறீர்கள் வாழ்த்துகள் தொடர்கிறேன்.
    நண்பரே தாங்கள் மதுரை பதிவர் விழாவுக்கு வந்தீர்களோ ?
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

    பதிலளிநீக்கு