widgets
காதல்கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல்கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 27 ஏப்ரல், 2015

பிரிந்து இருப்பதில் பிரியமுமில்லை

பிரிந்து இருப்பதில் பிரியமுமில்லை
காத்திருப்பதில் அர்த்தமுமில்லை
உன்னை மறக்கத் தெரியவுமில்லை
நீயின்றி வேற உறவுமில்லை.....

உன்னைப் போல ஒரு துணையுமில்லை
உனக்கு நான் தகுதியுமில்லை
நீயின்றி மனம் நிம்மதியுமில்லை
இதை நான் எடுத்துச் சொல்லியும்
என் மனம் கேட்பதுமில்லை....

#றியாஸ்முஹமட்

வியாழன், 23 ஏப்ரல், 2015

காதல் மனைவி



வேலை முடிந்து

தாமதமாக வருகையில் 
தவித்திருப்பாயே..!

எங்கடா போனாய்

அத்துவானம் என்று
மார்போடு அணைப்பாயே..!

நல்லா சாப்பிட வேண்டும்

என் ஆண் குட்டி என்று
என் தலை கோதுவாயே

என் தாயோ என்று

தலை நிமிர்ந்தேன்
தாரமாய் அருகில் நின்றாயே..!

சொட்டும் மழையில் 

நான் நனைய
கண்ணீர் மழை வடிப்பாயே..!

வானாடா..

வந்திடுடா..
ஓடோடி வந்து
முந்தானை குடை பிடிப்பாயே..!

ஒற்றை பின்னல் சடை போட்டு

ஓரப்பார்வையால்,
ஓரம் வந்து என்னை
ஒற்றிக் கொண்டே,
நிற்பாயே..!

என் இமை ஓரங்களில்

கண்ணீர் துளிகள்,
எட்டிப் பார்க்கும் முன்பே
உன் புடவை முந்தானையால்
துயர் துடைப்பாயே..!

கடற்கரை மண்ணில் 

என் கை பிடித்து
நம் பெயர் எழுத வைப்பாயே..!

அலைகள் வந்து

அழித்து விட...
உன் அழகு முகம்
சிவந்திட...
என்னை அள்ளி
அணைப்பாயே..!

கவிஞா..!! கவிஞா..!!

ஒரு கவிதை சொல்லடா
என் காது கடிப்பாயே..!

நான் நிலவை ரசித்து

கவிதை சொல்ல,
நீ என்னை
ரசித்து கவிதை
கேட்பாயே....

#றியாஸ்முஹமட்