widgets

வெள்ளி, 22 மே, 2015

எங்க ஊரு! இந்த ஊரு!!


இலங்கையின் முத்துடா..!!
கிழக்கிலொரு சிப்பிடா..!!
செம்மண் புழுதிடா..!!
சங்ககால வாசமடா..!!
என் அன்னை மடிய‌டா..!!
என் அண்ணாமார் வாழும் ஊருடா..!!

ஊர் மெச்சி பாடும்
இவன் கல்குடாவின் 
எழுத்தடா..!!

மரம் வளர்த்த சந்தியடா
மூன்று இனமும் கூடும்
முச்சந்தியடா..!!
எவருக்கும் கொடுக்குமிது
தஞ்சமடா..!!

இந்த ஊருக்கு இல்லை
பஞ்சமடா..!!
கவிஞர்கள் பட்டாளம்
வாழும் ஊரடா..!!
இலக்கிய மகாநாடே
நடத்தலாண்டா..!!

கல்வி மான்கள் வாழும்
ஊருடா..!!
பல கவரிமான்கள்
உயிர் துறந்த மண்ணுடா..!!
ஆறு குளம் கடல் 
கவி பாடுமடா..!!
தெருக்களும் நெலிந்து
நடனமாடுமடா..!!

குறிஞ்சி,முல்லை,
நெய்தல் ,பாலை
இத்தனை அழகும்
ஒரு  ஊரில் எப்படிடா !!
ஓடி வந்து கேளுடா..!!
கல்குடவைப் பாரடா..!!

சூரா சபை சுழல்கிறதுடா..!!
உலமா சபை உலாவுகிறதுடா..!!
பல ஜமாத்தும் இருக்குதடா..!! 
ஹயாத்தோடுதான்
வாழ்கிறதுடா..!!

ஆனாலும் என்னடா..!!
ஆனாலும் என்னடா..!!
கல்குடாவுக்கு ஒரு அரசியல் 
தலைவன் இன்னும்
இல்லையடா..!!

#றியாஸ் முஹமட்

1 கருத்து:

  1. வணக்கம்
    ஊரின் மகின்மையை அற்புதமாக கவிவடித்துள்ளீர்கள்.

    ஒற்றை பாலத்தின் வழி புகையிரம்
    அடுத்த வழியில் மனிதனடா.
    பலகாலம் ஒற்றை பாலத்தில் பயணம்
    இப்போ இரட்டை பாலத்தில் பயணம்.
    நன்றாய் தெரியுது முன்னேற்றம்...

    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வலையுலக ஜம்பவான்கள் இருவருக்கு விருது…-2015:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு