எழுத நினைக்கிறேன்
ஒரு கவிதை,
அடக்க முடியவில்லையே
என் அழுகை..,
எழுது எழுது என்று
நினைக்கிறது மனது
அழுது அழுது
என் பேனாவும் பழுது
என்ன வாப்பா அவசரம்
போகும் போதும் சொன்னீர்களாமே
என்னை பத்திரம்
பேனாவை எடுத்தால்
பேச்சு வரவில்லை வாப்பா
ஏட்டை விரித்தால்
எழுத்து வரவில்லை வாப்பா
காகிதமும் என் கண்ணீரால்
கரைந்து போனதே வாப்பா
தளை தட்டுது வாப்பா
மூச்சு முட்டுது வாப்பா
எதுகை மோனை கூட
அழுகை வேதனையாக ஆனதே வாப்பா
நான் எழுதிய கவிதைகளும்
கண்ணீர் வடித்து கதறுகிறதே வாப்பா
கூடவே இருப்பீர்கள் என்றுதானே
கொடி போல படர்ந்தேன்
பாதியில விட்டுப் போகவா
பனமரம்போல வளர்ந்தேன்
என்ன வாப்பா அவசரம்
போகும் போதும் சொன்னீர்களாமே
என்னை பத்திரம்
நான் சந்தி வழியிறங்கி
பள்ளி செல்ல,
சவூதி வழியிருந்து
வழி சொல்வீர்களே வாப்பா
நாவலடிதானே போனீர்கள் வாப்பா
காலடி கூட மாற வில்லையே
மரணப்பிடி பிடிக்கையிலே
என்னென்ன நினைச்சிருப்பீங்க
தன்னந்தனியா தவிச்சிருப்பீங்க
போங்கள் போங்கள்
என் வாப்பா மண் மறைந்தார்
என்று சொல்பவர்கள்
என் கண் மறைந்து போங்கள்
#றியாஸ்முஹமட்

வணக்கம்
பதிலளிநீக்குவாப்பா காட்டிய பாசத்தை யாரும் எளிதில் மறக்கமாட்டார்கள் அவர்கள் இருக்கும் போது சில பிள்ளைகளுக்கு வாப்பாவின் அன்பு தெரிவதில்லை அவர் இல்லாமல் போகும் போதுதான் அதன் தாக்கம் தெரியும் கவிதையை படித்த போது மனம் கனத்து விட்டது. வாப்பாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-