widgets

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

சீதனம்

சீதனம்
................

கன்னிக்கு ஏன் வேதனை
கரும சீதனத்தின் சோதனை.

கன்னிக்கோ
கலியாணம்
கடந்த வயது.....

கலியாணச் சந்தையில்
கனவுகளோடு
காலூன்றி நிற்கும்
கற்புக் கன்னி.

கல்யாணராமர்களோ
கன பேர்,
கரும சீதனக்
கனவுகளோடு...

கல்யாணராமனுக்கு
காணிக்கையில்லை,
காணிக்கை கேட்பவன்
கடவுளுமில்லை.

கரும்பு தின்னக் கூலியோ... ?
கணவனாக காசோலையோ...?

கண் கெட்ட,
கல்யாண காளையர்
காசு கொடுத்தும்

கடை,நகை,வாகனமாம்
கணக்குப் பார்க்கின்றான்
கச்சிதமாய்...

கணக்குப் பிழையானது,
கல்யாணம் விலையானது,

கன்னியின் இன்பக்
கனவுகளோ கானல் நீராய்
கரைகிறது.......!

கலியாணச் சந்தையிலோ
காசுகளோ குவிகின்றது,

காலங்களோ கடந்தாலும்,
கல்யாணராமர்களோ
கலக்குகின்றார்கள்-புதுக்
கட்டழகோடு....!

கன்னிக்கு என்ன வேதனை
கரும சீதனத்தின் சோதனை.

@றியாஸ் முஹமட்

3 கருத்துகள்:

  1. வணக்கம்
    வரதட்சனை கொடுமையால் எத்தனை பெண்கள் இல்வாழ்வு இல்லாமல் வாழ்கிறார்கள் அவர்களின் வாழ்விலும் விடியல் பிறக்கட்டும்.. அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. மிகுந்த மகிழ்ச்சி நண்பா
    நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு
  3. மிகுந்த மகிழ்ச்சி நண்பா
    நன்றிகள் பல...

    பதிலளிநீக்கு