widgets

ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

கூழாங்கற்கள்


துரத்திப் பிடித்து,
விளையாடும்
குழந்தைகளை,
துரத்திக் கொண்டு
இருக்கிறது
இஸ்ரேலியப் படை..!!

குண்டடித்து
விளையாடும்
இந்த வயதில்,
குண்டுகளை வீசி
சல்லடையாக்கும்
நாசகாரப் படை..!!

பதுங்கு குழிப்
பாம்புகளாய்
பச்ச மண்ணை
பசியோடு தின்னும்
நரமாமிசப் படை..!!

கூழாங் கற்கள்
இவர்கள் ஆயுதம்,
கூவி,கூவி
பார்த்தார்கள்
முடியவில்லை
காரியம்..!!

அமெரிக்காவோ
'வீட்டோ'
அதிகாரத்தைக்
கொண்டு
இஸ்ரேலைப்
பாதுகாக்க..!!

அரபு நாடுகளோ
'வீட்டோடு'
இருந்து வேடிக்கை
பார்க்க..!!

உதைப்பந்தாட்டத்தில்
உதைபட்டுக்
கிடக்கிறது
நம் சமூகம்..!!

காஸா
கதை கேட்க
எங்கே
இருக்கிறது
நேரம்..!!

இனி இறைவன்தான்
இவர்களுக்கு
பேராயுதம்..!!

#றியாஸ்முஹமட்

1 கருத்து:

  1. வணக்கம்
    அந்த மக்களின் வாழ்விலும் ஒரு விடியல் மலரும் காலம் விரைவில் பதில் சொல்லும் அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு