வேலை முடிந்து
தாமதமாக வருகையில்
தவித்திருப்பாயே..!
எங்கடா போனாய்
அத்துவானம் என்று
மார்போடு அணைப்பாயே..!
நல்லா சாப்பிட வேண்டும்
என் ஆண் குட்டி என்று
என் தலை கோதுவாயே
என் தாயோ என்று
தலை நிமிர்ந்தேன்
தாரமாய் அருகில் நின்றாயே..!
சொட்டும் மழையில்
நான் நனைய
கண்ணீர் மழை வடிப்பாயே..!
வானாடா..
வந்திடுடா..
ஓடோடி வந்து
முந்தானை குடை பிடிப்பாயே..!
ஒற்றை பின்னல் சடை போட்டு
ஓரப்பார்வையால்,
ஓரம் வந்து என்னை
ஒற்றிக் கொண்டே,
நிற்பாயே..!
என் இமை ஓரங்களில்
கண்ணீர் துளிகள்,
எட்டிப் பார்க்கும் முன்பே
உன் புடவை முந்தானையால்
துயர் துடைப்பாயே..!
கடற்கரை மண்ணில்
என் கை பிடித்து
நம் பெயர் எழுத வைப்பாயே..!
அலைகள் வந்து
அழித்து விட...
உன் அழகு முகம்
சிவந்திட...
என்னை அள்ளி
அணைப்பாயே..!
கவிஞா..!! கவிஞா..!!
ஒரு கவிதை சொல்லடா
என் காது கடிப்பாயே..!
நான் நிலவை ரசித்து
கவிதை சொல்ல,
நீ என்னை
ரசித்து கவிதை
கேட்பாயே....
#றியாஸ்முஹமட்

வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குஅருமையான வரிகள்.....
தொடர்ந்து பல நற்படைப்புக்களைத்
தாருங்கள்
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநன்றி, அருமை நண்பி
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தருகிறது
.......
வணக்கம்
பதிலளிநீக்குகவிதையில் காதல் வானை அள்ளி வீசுது... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குநீங்கள் வாழ்த்தியதில்
மகிழ்ந்தேன்
கவிஞர் ரூபன் அவர்களே!
மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குநீங்கள் வாழ்த்தியதில்
மகிழ்ந்தேன்
கவிஞர் ரூபன் அவர்களே!