widgets

வியாழன், 30 ஏப்ரல், 2015

யூத்


இன்டர் நெட்டில்
இடறி விழுந்தான்
கைபேசியில்
கைதியானான்

விதைக்கும் காலத்தை
விரயம் செய்கிறான்
தல என்கிறான்
தளபதி என்கிறான்

பார்த்து பார்த்து சிரிக்கிறான்
பார்க்காத போதும் சிரிக்கிறான்
போதையில் மிதக்கிறான்
போற இடம் மறக்கிறான்

பேராண்மை என்கிறான்
பேரின்பம் என்கிறான்
தறிகெட்டு ஆடுகிறான்
தகிட தாளம் போடுகிறான்

சிகரெட்டில் தீ வைத்து
சிந்தனைகளை எரிக்கிறான்
எதைப் புரிந்து கொண்டான்
எதை தெரிந்து கொண்டான்

கேள்வி கேட்டால்
கேள்விக்குப் பதில்
யூத்
யூத்தாமாம்

#றியாஸ்முஹமட

2 கருத்துகள்:

  1. அருமையான வரிகள் நண்பரே இன்றைய இனைஞர்களுக்கு பொருத்தமானவை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    இனிய மேதின வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு